முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சுற்றுலா > சு‌ற்றுலா செ‌‌ய்‌தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கு‌ற்றால‌ அரு‌வி‌யி‌ல் கொ‌ட்டு‌கிறது ‌நீ‌ர்  Search similar articles
கட‌ந்த ஜூ‌ன் மாத‌ம் முழுவது‌ம் சு‌ற்றுலா‌ப் ப‌ய‌ணிகளை அலைக‌ழி‌த்து வ‌ந்த கு‌ற்றால அரு‌வி‌யி‌ல் நே‌ற்று த‌ண்‌ணீ‌ர் வர‌த்து அ‌திக‌ரி‌த்தது.

இதையடு‌த்து அ‌ங்கு வரு‌ம் பய‌ணிக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை க‌ணிசமாக அ‌திக‌ரி‌த்தது. கு‌ற்றால அரு‌வி‌யி‌ல் கு‌ளி‌க்க பய‌ணிக‌ள் வ‌ரிசை‌யி‌‌ல் ‌நி‌‌ற்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சுமார் 135 கி.மீ. தூரத்தில் தென்காசியில் உள்ளது குற்றாலம். குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி.

குற்றாலம் அருவியில் குளிப்பது என்பது குதூகலமான ஒன்று என்பதையும் விட, இந்த அருவிக்கு மருத்துவ குணம் இருப்பதும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.

குற்றாலம் பேருந்து நிலையத்தில் இருந்து அருகிலேயே குற்றால அருவி அமைந்துள்ளது. குற்றாலத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஐந்தருவியும், 8 கி.மீ. தூரத்தில் பழைய அருவியும் உள்ளன.

கன்னியாகுமரி சென்று அங்கிருந்து குற்றாலம் செல்வது மிகவும் வசதியானது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அதிக பேருந்துகள் உள்ளன. கன்னியாகுமரியில் இருந்து தென்காசிக்கு சென்று அங்கிருந்து அதிக சிற்றுந்துகள் குற்றாலம் செல்கின்றன. தென்காசி ரயில் நிலையம் சென்று அங்கிருந்து குற்றாலம் செல்லலாம்.

குற்றாலம் செல்ல ஏற்ற நேரம் ஜூன் மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலாகும். இரவு நேரங்கள் மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் அதற்கேற்ற உடைகளை எடுத்துச் செல்வது நல்லது.

குற்றாலம் செல்லும் சுற்றலாப் பயணிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று அங்கிருக்கும் சுற்றுலாத் தலங்களையும் கண்டு களித்து வரலாம்.
மேலும்
சு‌‌ற்றுலா‌ப் பய‌ணிகளை‌க் கவர வேக‌ப் படகு!
சுற்றுலா மற்றும் கல்வி கண்காட்சி
ஊட்டி‌யி‌ல் ரோஜா கண்காட்சி துவ‌ங்‌கியது!
மு‌ட்டு‌க்கா‌ட்டி‌‌ல் ரூ.150 கோடி‌யி‌ல் கடலடி ‌நீ‌ர்மி‌ன் கா‌ட்‌சியக‌ம்: சுரே‌ஷ்ராஜ‌ன்!
கிராம‌ப்புற‌ புற சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி மே‌ம்படு‌த்த‌ப்படு‌ம்: சுரே‌ஷ்ராஜ‌ன்!
வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌‌ங்கா: சுரே‌ஷ் ராஜ‌ன்!