முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சுற்றுலா > சு‌ற்றுலா செ‌‌ய்‌தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மகளிர் தினச் சலுகை : தமிழக சுற்றுலா கழகம் அ‌றிவிப்பு
உலக மகளிர் ‌தின‌ம் நாடு முழுவது‌ம் கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு வரு‌ம் இன்று, பெ‌ண்களு‌க்கான ‌சி‌ற‌ப்பு சலுகையை த‌மிழக சு‌ற்றுலா‌க் கழக‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அதாவது சுற்றுலா செல்வ‌தி‌ல், விடுதியில் பதிவு செய்யும் பெண்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 10 விழுக்காடு தள்ளுபடி வழங்குகிறது

இது குறித்து தமிழக சுற்றுலாக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

உலக மகளிர் தினமான இன்று, சுற்றுலாவிலும் (திருப்பதி சுற்றுலா), தங்கும் விடுதியிலும் பதிவு செய்யும் பெண்களுக்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பத்து சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.

இப்படி பதிவு செய்யும் சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகளுக்கு, வரும் மாதங்களில் எப்போது சென்றாலும், இப்பதிவு செல்லும். மேலும், இன்று சென்னை தீவுத் திடலில் நடக்கும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சிக்கு வரும் அனைத்து பெண்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
சு‌ற்றுலா‌ வள‌ர்‌ச்‌சி ‌பிரகாசமாக உ‌ள்ளது!
அறிவியல் கண்காட்சி ரயில் 29ஆ‌ம் தேதி சென்னை வருகை!
சென்னை தீவுத் திடல் பொருட்காட்சியில் இலவச சித்த மருத்துவ‌ம்!
சு‌ற்றுலா மே‌ம்பா‌ட்டு ப‌ணி‌க்கு தமிழக அரசு‌க்கு தேசிய விருதுகள்!
இ‌ந்‌திய சு‌ற்றுலா பய‌ணிகளு‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌த்த 3 நா‌ட்க‌ளி‌ல் ‌விசா : ரஷ்யா!
தொடர் பேருந்து சுற்றுலா திட்டம்