முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சுற்றுலா > தமிழ் நாடு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கல்லணை!
இப்படிப்பட்ட கட்டுமானத்திற்கு இன்றைய தொழில்நுட்பப் பெயர் என்ட் ஆன் மெத்தட் (End-on-Method) என்பதாகும். இந்த முறையில்தான் தற்காலத்தில் துறைமுகங்கள் கட்டப்படுகின்றன. கப்பல்கள் வந்து நிற்கும் துறைகளில் கடல் அலைகள் தாக்காமிலிருக்க, இரண்டு கைகளால் அரவணைப்பது போன்று துறைமுகச் சுவர்கள் கட்டப்படும். அவைகளை கட்டுவதற்கு, கரையிலிருந்து பெரும் பாறைகளை கடலில் உருட்டி விடுவார்கள்.

அந்தப் பாறைகள் ஒவ்வொன்றும் கடலில் அமிழ்ந்து உறுதியாக நிற்கும். அதன் மீது மேலும் மேலும் பாறைகளை உருட்டி மேடாக்கி, நீண்ட சுவர்போல எழுப்பி, அதனையே பாதையாக்கி மேலும் பாறைகளை கொண்டு சென்று உருட்டிவிடுவர். இந்த முறையில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது என்று அதனை 19வது நூற்றாண்டில் பார்வையிட்டு அசந்துபோன வெள்ளைய பொறியாளர் ஆர்தர் காட்டன் கூறினார்.

webdunia photoWD
இந்த ஆர்தர் காட்டன்தான், காவிரியில் இருந்து கொள்ளிடத்திற்குப் பாயும் நீரையும் கட்டுப்படுத்தித் திறந்துவிட மதகுகளை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பெரிய அணை என்றும் அழைக்கப்படும் கல்லணையின் மீது பிற்காலத்தில் மதகுகள் எழுப்பப்பட்டு, கூடுதலாக வரும் நீர் அளவோடு பாசனத்திற்குத் திறந்துவிடப்பட்டது.

அன்றைக்கு கரிகாலன் கட்டிய கல்லணை இன்று பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்டு, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் என்று 4 வழியாக பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது. காவிரியில் நீர்வரத்து குறையும் காலங்களில் முறைவைத்து நீர் திறந்து சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்துதலும் நடைமுறையில் உள்ளது.

கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணையை நேரில் சென்று பார்த்தால்தான் புரியும் எவ்வளவு பெரிய சாதனை அதுவென்பது. கல்லணை இன்று சுற்றுலாத் தலமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அழகிய பூங்காவுடன் காவிரிக் கரையில் ஒரு நாள் பொழுதை கழிக்க உகந்த சுற்றுலாத் தலம் இது.

எப்படிச் செல்வது :

திருச்சியிலிருந்து 17 கி.மீ. தூரத்திலுள்ளது. அரசு பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகின்றது.
<< 1 | 2 
புகைப்படத்தில்
கரிகாலன் கட்டிய கல்லணை!
மேலும்
ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு போகலாம்
ஒரு மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்க...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : பாருங்கள்
சுதந்திர எக்ஸ்பிரஸ் இரயில்: 20ஆ‌ம் தேதி வரை பார்க்கலாம்!
வால்பாறையில் இருந்து.... டாப் ஸ்லிப் வரை
செ‌ன்னை ஆ‌ட்டோ‌க்க‌ளி‌ல் சு‌ற்றுலா வரை‌ப்பட‌ங்க‌ள்: த‌‌‌மிழக சு‌‌‌‌‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி கழக‌‌ம் முடிவு!