ஏனென்றால் கடற்கரையை தொலைவில் இருந்தே ரசிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இயந்திர வாழ்க்கையில் ஒரு நாள் முழுவதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கழிக்க கோவளம் ஏற்ற இடம்.
வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியாக கோவளம் கடற்கரையைச் சுற்றி ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. பெரிய பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் உள்ளன. கடற்கரையை ஒட்டிய தங்கும் விடுதிகளும் இங்கு சிறப்பாக செயல்படுகின்றன.
என்ன கோவளத்தைப் பற்றிச் சொன்னதும் இந்த கோடையை கோவலத்தில் அனுபவிப்பது என்று கிளம்பிவிட்டீர்களா...
உங்கள் பையில் கடற்கரையில் அணிந்து கொள்வதற்கான உடை, சூரிய ஒளியில் இருந்து சருமத்தைக் காக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
சென்னை உள்ளிட்ட பல முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து கோவளத்திற்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளுக்கு பஞ்சமே இல்லை.
தனியாக வாகனம் எடுத்துக் கொண்டு செல்வதும் மிகவும் சிறந்ததுதான். ஏனென்றால் நமது பொருட்களை வைத்துக் கொள்ளவும். நாம் விரும்பும்போது அங்கிருந்து கிளம்பிக் கொள்ளவும் இயலும்.
என்ன கிளம்பிவிட்டீர்களா கோவளத்திற்கு?
|