அதாவத சபரிமலைக்கு ரயில்கள் மூலம் செல்லும் பக்தர்கள் செங்கனூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர். இதனால், வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந் தேதி வரை செங்கனூர் ரயில் நிலையத்தின் வழியாகச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் 5 நிமிடம் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சென்டிரல்- திருவனந்தபுரம் விரைவு ரயில் (வ.எண். 2697), திருவனந்தபுரம்- சென்னை சென்டிரல் விரைவு ரயில் (2698), திருவனந்தபுரம்- புதுடெல்லி விரைவு ரயில் ( 7229), கன்னியாகுமரி-பெங்களூர் விரைவு ரயில் (6525), திருவனந்தபுரம்- ஐதராபாத் விரைவு ரயில் , திருவனந்தபுரம்-சென்டிரல் மெயில் (2624), திருவனந்தபுரம்-மங்களூர் விரைவு ரயில் (6629), திருவனந்தபுரம்- மங்களூர் மெயில் (6347) ஆகிய ரயில்கள் செங்கனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேற்கண்ட தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.