திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த திங்கட்கிழமை துவங்கி நடைபெற்று வரும் பிரமோற்சவம் விழா இன்றுடன் நிறைவடைகிறது.
பிரம்மோற்சவ நிறைவு விழாவான இன்று காலை 6 மணிக்கு சக்கரஸ்நானம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு விழா நடைபெறுகிறது.
webdunia photo
WD
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கடந்த 21ம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ஆம் நாளான வெள்ளிக்கிழமை கருட வாகன சேவை நடைபெற்றது. 8வது நாள் விழாவான நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் உலா வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 9 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.
9 நாட்கள் நடைபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்தனர்.