மழையினாலும், வெய்யிலினாலும் நனைந்து பிறகு காய்ந்து - இப்படி பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடக்கும் இயற்கையின் சுழற்சியால் - இம்மலைகளின் மேல் பரப்பு வெடித்து பிறகு பிளந்து பின் சிறு சிறு பாறைகளாக உதிர்ந்து அடிவாரத்தில் குவியலாய் சேர்ந்திருக்க, அதன் நடுவிலிருந்து ஏதொ பொத்துக் கொண்டு மேலே வந்தது போலத் தோன்றிடும் தோற்றத்தை பெறுகின்றன.
இவைகளை மொனாட்நாக்ஸ் என்று கூறுகிறது பூகோளவியல். அதாவது கடின பாறைகளால் ஆகி துணையின்றி தனித்து நிற்கும் மலைகள்.
இப்படிபட்ட மலைகளில் தான் சில இடங்களில் நாம் ஆபூர்மான சிற தோற்றங்களைக் (சில நேரங்களில் மேகங்கள் காட்டும் ஜாலங்களைப் போல) காணலாம். இப்படி ஒரு மொனாட்நாக்ஸை கண்டுவிட்டு ஸ்டீவன் ஸ்பீல்பர்க் அபாரமாக கற்பனை செய்து (Close Encounters) பெரிய ஆள் ஆனது வேறு கதை!
இம்மலைகளில் இருந்து வெளியேறும் சிறு சிறு ஊற்றுக்கள் இவைகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. பசுமையை ஆடையாகக் கொண்டு அழகை அள்ளிக் கொட்டும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நேர் மாறாக இம்மலைகள் பழுப்பு அழகுடன் தங்களின் காலத்தின் தொன்மையை பறைசாற்றிக் கொண்டு நிற்கின்றன.
(இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்கத் தோன்றுகிறதா? எல்லாம் டிகிரியில் (இளம் பூகோளவியல்) படித்ததுதானப்பா)
|