முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > உலக ‌சி‌னிமா
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆஸ்கர் : மரணத்தின் கலை!
அவன் ஒரு கில்லர். கையில் துப்பாக்கி. அவனுக்கு ஐந்தடி முன்னால் ஒரு போலீஸ்காரர். திடீரென்று அறை தொலைபேசி ஒலிக்கத் தொடங்குகிறது. தொலைபேசி சற்றுத்தள்ளி இருவருக்கும் சமதூரத்தில் இருக்கிறது. ஒலிக்கும் தொலைபேசியிலிருந்து பார்வையை விலக்கி கில்லர் போலீஸ்காரரை பார்க்கிறான்.

இதற்கு அடுத்து வரும் காட்சி மூன்று விதமாக அமையலாம். ஒன்று, கில்லர் போலீஸ்காரரிடம் தொலைபேசியை எடுத்துப் பேசச் சொல்லலாம். இரண்டு, துப்பாக்கி முனையில் போலீஸ்காரரை நிறுத்தி, கில்லரே தொலைபேசியில் பேசலாம். அல்லது, தொலைபேசியை எடுக்காமலே விட்டுவிடலாம்.

கோய்ன் சகோதரர்களின் நோ கண்ட்ரி ஃபார் ஓல்டு மென் திரைப்படத்தில் வரும் கில்லர் நான்காவதாக ஒரு முடிவை எடுக்கிறான்.

webdunia photoFILE
எண்பதாவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்தப் படம், சிறந்த இயக்குனர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என நான்கு விருதுகளை நோ கண்ட்ரி ஃபார் ஓட்டு மென் கைப்பற்றியது. கார்மேக் மெக்கார்த்தி இதே பெயரில் எழுதிய நாவலையே கோய்ன் சகோதரர்கள் படமாக்கியிருந்தனர்.

1980-ல் மேற்கு டெக்சாஸின் புழுதி பறக்கும் வறண்ட பாலைவனப் பகுதியில் நடக்கும் கதையிது. போதைப் பொருள் கடத்தலில் ஏற்பட்ட மோதல், கொலைகள், போலீஸ் விசாரணை, பணம் மற்றும் பணத்துக்காக தொடர்ந்து வரும் கொலையாளி. கேட்பதற்கு வழக்கமான ஹாலிவுட் திரைப்படமாகத் தோன்றும். ஆனால் இது காவியம்.

டோனி ஸ்காட்டின் மென் ஆன் ஃபயர் படத்தில், சி.ஐ.ஏ.யின் ட்ரெயிண்ட் கில்லரான டென்சில் வாஷிங்டன் தனது எதிரிகளை ஒவ்வொருவராக அழித்துக்கொண்டே வருவார். அதனை டென்சிலின் நண்பர் போலீஸ் அதிகாரியிடம் இப்படி வர்ணிப்பார்; டென்னசிலின் கலை, மரணம்! அவர் தனது கலையின் மாஸ்டர் பீஸை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்!

நோ கண்ட்ரி ஃபார் ஓட்டு மென் படமும் ஒரு மாஸ்டர் பீஸ். சரியாகச் சொன்னால், ஆ‌ர்‌ட் ஆஃ‌ப் ம‌ர்ட‌ர். மரண‌த்‌தி‌ன் கலை!

ராம்பிங் ஷாட்! பாஸ்ட் கட்டிங் போன்ற கொத்து பரோட்டத்தனங்கள் கோய்ன் சகோதரர்களின் படத்தில் இல்லை. ஒவ்வொரு கொலையும் நிதானமாக, முழுமையாக அதற்கேயுரிய அழகியலுடன் நடக்கிறது. பார்வையாளன் படத்தின் ஓட்டத்தில் கொலையை பார்க்கும் நிலையிலிருந்து மெல்ல கொலையில் பங்குகொள்ளும் ஒருவனாக மாறுகிறான்.

ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதற்கு மறுநாள், சைக்கோ கில்லர் திரைப்படங்கள் ஆஸ்கர் விருதில் ஆதிக்கம் செலுத்தியதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். அவர்களை அப்படி எண்ண வைத்த இன்னொரு படம், டாக்சி டு தி டார்க் சைட்.

22 வயதான ஆப்கான் டாக்‌சி டிரைவர், ஆப்கானில் உள்ள அமெரிக்கப் படைகளால் சித்ரவதைக்குள்ளாகி மரணமடைந்தார். பல நாட்கள் சிறையினுள் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டு அந்த டாக்சி டிரைவர் பூட்ஸ் காலால் மிதிக்கப்பட்டார்.
1 | 2  >>  
மேலும்
டே‌ஸ்‌ட் ஆஃ‌ப் செ‌ர்‌ரி!
சூப்பர் சைஸ் மீ - உலக சினிமா!
பெளர்ணமி இரவில் : உலக சினிமா!