முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > உலக ‌சி‌னிமா
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சூப்பர் சைஸ் மீ - உலக சினிமா!
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 32 வயது மார்கன்வாலன்டைன் ஸ்பெர்லாக்கிற்கு திடீரென்று திரைப்படம் இயக்கும் எண்ணம் உதிக்கிறது. உடடினயாக அவர் மது அருந்துவதை நிறுத்துகிறார். ஆறு வாரங்கள் கழித்து தனது உடம்பை முழுமையாக பரிசோதனை செய்து கொள்கிறார். மருத்துவர்கள் அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். பரிசோதனையினபோது மார்கனின் உடல் எடை 84.1 கிலோ கிராம்.

webdunia photoFILE
இந்தச் செய்தி மார்கனை குறித்த விந்தையான சாயலை படிப்பவர் மனதில் தரக்கூடும். சூப்பர் சைஸ் மீயை பார்க்கும் பார்வையாளனும் முதலில் இதுபோன்ற வேடிக்கையான கேளிக்கையை ரசிக்கும் மனநிலைக்கே தள்ளப்படுகிறான். ஆனால் மார்கனின் நோக்கம் கேளிக்கையல்ல. அமெரிக்கர்களின் ஆரோக்கியத்திற்கு சவாலாக இருக்கும் துரித உணவு நிறுவனங்களை கேள்விக்குட்படுத்துவது. அதற்காக தன்னை சோதனைக்கூடத்தின் பரிசோதனைப் பொருளாக மாற்றிக் கொண்டார் மார்கன். அதுவொரு மோசமான ஆச்சரியப்பட வைக்கும் ஐடியா!

துரித உணவு அமெரிக்க வாழ்வின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வால் மார்ட், பர்கர் கிங், ஸ்டார் பக்ஸ், மெக் டொனால்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் அமெரிக்காவின் துரித உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இதில் மெக் டொனால்ஸின் வளர்ச்சி அபாரமானது. அமெரிக்காவின் மொத்த துரித உணவு வர்த்தகத்தில் ஏறக்குறைய பாதியை கைவசப்படுத்தியிருக்கும் இந்நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உணவகங்களுடன் பிரம்மாண்டமாக கிளபரப்பி நிற்கிறது.

அதிகபடியான கலோரிகள் கொண்ட துரித உணவுகளால் உருவாகும் மோசமான விளைவுகளில் ஒன்று உடல் பருமன். அமெரிக்கர்களில் பாதிக்கும் மேல் ஓபெசிடி எனப்படும் அதிக உடல் பருமன் கொண்டவர்கள். குழந்தைகளில் 37 விழுக்காடு பேர் தேவையில்லாத உடல் பருமனுடன் இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

இதய நோய், நீரிழிவு, கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றின் தோற்றுவாயாக உடல் பருமன் இருக்கிறது.

தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மார்கன், இரண்டு பருமனான பெண்கள், தங்களது அதிக உடல் பருமனுக்கு மெக் டொனால்ஸ் உணவுகளே காரணம் எனக் கூறுவதை காண்கிறார். அப்பொழுது அவர் மனசுக்குள் ஓர் எண்ணம். அந்த எண்ணமே சூப்பர் சைஸ் மீ விவரணப் படமாக உருவாகிறது.

சூப்பர் சைஸ் மீ படத்தில், நோயில்லாத ஒருவர் மருத்துவரை எதிர்கொள்ளும் கலகலப்பான மனநிலையுடன் தன்னைப் பரிசோதிக்கும் மருத்துவர்களுடன் உரையாடுகிறார் மார்கன். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து குறிப்பெடுத்துக் கொள்கின்றனர். பிறகு பார்வையாளர்களுக்கு தனது திட்டத்தை விளக்குகிறார் மார்கன்.

தொடர்ந்து முப்பது நாட்கள் தினம் மூன்று வேளை உணவையும் மெக் டொனால்ஸ் துரித உணவகத்தில் எடுத்துக் கொள்வது. இரண்டாவது, முப்பது நாட்களுக்குள் மெக் டொனால்ஸின் மெனு கார்டில் உள்ள உணவுகள் அனைத்தையும் ஒரு முறையாவது சாப்பிடுவது.
1 | 2  >>  
மேலும்
பெளர்ணமி இரவில் : உலக சினிமா!