கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » விமர்சனம் » மாயாண்டி குடும்பத்தார்
விமர்சனம்
Feedback Print Bookmark and Share
 
பத்து இயக்குனர்கள் முதலமுறையாக இணைந்து நடித்திருக்கும் படம் என்ற விளம்பர வாசகங்களுடன் வெளிவந்திருக்கிறது இராசு மதுரவனின் மாயாண்டி குடும்பத்தார். காதல், பாசம், வீரம், துரோகம், பொறாமை, கோபம் என அனைத்தும் கலந்து காவியமாக மணக்கிறது இந்த கிராமத்து கதம்பம்.

அண்ணன், தம்பி குடும்பத்தின் சொத்து தகராறு என்ற மெல்லிய இழைதான் கதை. அதில் இராசு மதுரவன் தொடுத்திருக்கும் சரம், சில நேரம் கண்ணில் நீரை வரவழைக்கிறது, சில நேரம் சி‌ரிப்பில் வயிறை குலுங்க வைக்கிறது.

webdunia photoWD

மாயாண்டியாக வரும் மணிவண்ணன் குடும்பத் தலைவர். நடிப்பிலும் இவரே தலைவர். மகன் தருண்கோபியின் படிப்புக்காக கண்ணீர்விட்டு கதறும்போது நம்மையும் கலங்கடிக்கிறார். மாயாண்டி மணிவண்ணனுக்கு மைல் கல்.

தருண்கோபியின் மீதுதான் மொத்த கதையும் பயணிக்கிறது. சும்மாவே சோகத்தை காட்டும் முகம் என்பதால் அண்ணிகள் அவமானப்படுத்தும்போதும், காதலியை பி‌ரியும் போதும் காட்சியோடு ஒன்றிப் போகிறது தருணின் நடிப்பு. சேரனின் இரண்டாவது அவதாரம்போல் எப்போதும் சோகத்தையே பிழிந்து கொண்டிருப்பது ஏனோ?

மணிவண்ணனின் மகன்களான சீமான், பொன்வண்ணன், ஜெகன்நாத், மணிவண்ணனின் அண்ணன் ‌ஜி.எம்.குமா‌ரின் மகன்களான நந்தாபெ‌ரியசாமி, ரவிம‌ரியா, சிங்கம்புலி ஆகியோ‌ரில் கவர்வது மூளை வளர்ச்சி குறைந்தவராக வரும் சிங்கம்புலி. குழந்தை எப்படி பிறக்கும் என்ற இவரது கேள்வி ஏற்படுத்தும் சி‌ரிப்பு அலை தியேட்ட‌ரில் அடங்க வெகு நேரமாகிறது. அண்ணன்கள் அடித்துக் கொள்ளும்போது ஜஸ் சப்பிக் கொண்டே இவர் அடிக்கும் கூத்து அடேங்கப்பா.

மணிவண்ணன் இறந்ததும் அவரது மூத்த மகன்களின் மனைவிகள் கொழுந்தன் தருண்கோபியை அவமானப்படுத்தி விலக்குவது கிராமத்து யதார்த்தம். தம்பியின் தனி சமையலை ருசி பார்க்கும் பாசக்கார அண்ணன்கள் பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத்.

webdunia photoWD

பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் இராசு மதுரவனுக்கு டாக்டரேட் தரலாம். தருண்கோபிக்கு கறி சோறு இல்லை என்பது தெ‌ரிந்து அண்ணன்கள் பணம் கொடுத்து சாப்பிடச் சொல்வதும், பி‌ரியாணி வாங்கித் தருவதும் சின்ன உதாரணம்.

பெ‌ரிய உதாரணம், காது குத்துக்கு செல்லும் தருண்கோபி, திங்க வந்துட்டான் என்ற மச்சானின் அவமதிப்பை கேட்டு சாப்பிடாமல் ஐம்பதாயிரம் மொய் எழுதிவரும் காட்சி. அய்யா என்னை பெத்தவன் சாகலைடா, நீதா‌ண்டா என்னை பெத்தவன் என்று அக்கா தீபா நடுரோட்டில் புரளும்போது நம்மீதும் ஒட்டிக் கொள்கிறது அந்த சோகப்புழுதி.

சீமானின் கம்பீரக்குரலில் ஒலிக்கும் பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சை ூக்குதடா பருந்து பாடல் நரம்பை முறுக்கேற்றுகிறது. இசை சபேஷ் முரளி. சபாஷ் சொல்ல வைக்கின்றன மற்ற பாடல்களும். மேட்டுபட்டி கிராமத்து வாழ்வை அப்படியே கேமராவில் வடித்திருக்கிறார் பாலபரணி.

அளவுக்கதிகமான சோகமும், இடைவேளைக்குப் பிறகு வரும் தொய்வான சில காட்சிகளும், ஒரு குடும்பத்தினர் விட்டுக் கொடுப்பதும், இன்னொரு குடும்பம் பகை வளர்ப்பதுமான பழைய சினிமா ஃபார்முலாவும் படத்தின் குறைகள். ஆனாலும்,

கிராமத்து மனிதர்களின் உணர்ச்சிகளை திரையில் கொண்டுவரும் முயற்சியில் எளிதாக ஜெயித்திருக்கிறார் இராசு மதுரவன்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மாயாண்டி குடும்பத்தார், விமர்சனம், இராசு மதுரவன், தருண்கோபி, மணிவண்ணன், சீமான்