கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » மு‌ன்னோ‌ட்ட‌ம் » மத்திய சென்னை (Madhiya Chennai Preview)
மு‌ன்னோ‌ட்ட‌ம்
Bookmark and Share Feedback Print
 
ராப்டர் மீடியா பிலிம்ஸ் சார்பில் ராஜேஷ் ஜே.கந்தன் தயா‌ரித்திருக்கும் படம் மத்திய சென்னை. விவேகானந்தன் - வீரசிங்கம் என இரண்டு பேர் இணைந்து படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

WD
இதில் விவேகானந்தன் பார்த்திபனிடம் தொழில் பயின்றவர். வீரசிங்கம் பாரதிராஜாவிடம். படத்தின் ஹீரோ ஜெய்வந்த். பைனான்ஸ் முதல் இயக்குனர்களின் பணப் பற்றாக்குறை வரை அனைத்தையும் ஜெய்வந்தே கவனித்துக் கொண்டிருக்கிறார்.

ரம்யா பர்ணா என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர பிரகாஷ்ரா‌ஜ் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

சினிமாவை கிண்டல் செய்யும் கேரக்ட‌ரில் நடிக்க மாட்டேன் என்று பிரகாஷ்ரா‌ஜ் கூறியதால், அவருக்கு வேறொரு கேரக்டரை கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள். மகாதேவன், சண்முகராஜன், சார்லி, விஷாலினி, கஞ்சா கருப்பு ஆகியோரும் உண்டு.

சுள்ளிக்குப்பம் என்ற குப்பத்தை சேர்ந்தவர் ஹீரோ. தனது குப்பத்தை சீரமைக்க வேண்டும் என்பது அவரது கனவு. கனவை நிறைவேற்ற பணம் தேவை. குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஹீரோ சினிமா துறையை தேர்ந்தெடுக்கிறார். சினிமாவில் நுழைந்து, பணம் சம்பாதித்து, தனது குப்பத்தை குபேர காலனியாக மாற்றுகிறார். இதுதான் படத்தின் கதை.

இளையராஜஇசையமைத்திருக்கிறார். சண்டைப் பயிற்சி தளபதி தினேஷ். வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மத்திய சென்னை, முன்னோட்டம், விவேகானந்தன், வீரசிங்கம்