கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » மு‌ன்னோ‌ட்ட‌ம் » தம்பிவுடையான் (Thambivudayan Preview)
மு‌ன்னோ‌ட்ட‌ம்
Feedback Print Bookmark and Share
 
தம்பிவுடையான் காவி‌ி பிரச்சனையை பற்றிய படம். எம் தியேட்டர்ஸ் மகேஸ்வ‌ரி ராஜதயா‌ரிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராஜாமகேஷ் இயக்கியிருக்கிறார்.

WD
"சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகள் மாதி‌ி காவி‌ி நீர் வராத காலங்களில் பிழைப்பு தேடி தஞ்சை மக்கள் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்வது தஞ்சைக்காரனான என்னை ரொம்பவே பாதித்தது. இந்த அவலத்தை சொல்வதற்காக எடுத்தப் படம்தான் தம்பிவுடையான்" என்று படம் பற்றியும், தனது நோக்கம் பற்றியும் விளக்குகிறார் ராஜாமகேஷ்.

மாணவன் ஒருவன் படிப்பை தூர வைத்து தண்ணீருக்காக போராடுவதாக இயக்குனர் கதை அமைத்திருக்கிறாராம். காதலும் உண்டு. ஆதித்யா அன்பு, மனீஷா சட்டர்‌ஜி முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கமும்தான் காவி‌ி பிரச்சனை தீராததற்கு காரணம் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்களாம். இதனாலேயே 48 இடங்களில் கத்தி‌ி வைத்திருக்கிறது சென்சார். ஆதன் பிறகும் ய/ஏ சான்றிதழ்தான் இந்தப் படத்துக்கு கிடைத்திருக்கிறது.

படத்தில் தண்ணி பிரச்சனை பற்றிய பாடல் ஒன்றும் இருக்கிறது.

கன்னிமூல கணபதியே வணக்கம்... வணக்கம்...
காவி‌ரியில் தண்ணி வர ஏன் சுணக்கம்... சுணக்கம்...
மிச்சம்மீதி தண்ணிவிட மீசையை முறுக்குறானே
உச்சநீதி மன்றத்தையும் ஓரங்கட்டி வைக்கிறானே... என்று போகிறது பாடல்.

தம்பிவுடையான் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தம்பிவுடையான், காவிரி பிரச்சனை, ராஜாமகேஷ்