28 வருடங்களுக்கு முன் வெளிவந்த பாலைவனச் சோலையை ரீமேக் செய்திருக்கிறார்கள். எஸ்.தயாளன் இயக்க, மாருதி பிலிம்ஸ் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.
WD
பழைய பாலைவனச் சோலையில் சந்திரசேகர் நடித்த கதாபாத்திரத்தில் நிதின் சத்யாவும், சுஹாசனி நடித்த வேடத்தில் நம்நாடு கார்த்திகாவும் நடித்துள்ளனர். ஜனகராஜ் நடித்த வேடத்தை சாம்ஸ் என்பவர் செய்திருக்கிறார். இவர் ஒரு புதுமுகம்.
பாலைவனச் சோலையில் பூக்காரி கதாபாத்திரம் ஒன்று வரும். இதனை ரீமேக்கில் அரவாணியாக மாற்றியிருக்கிறார்கள். அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் தயாளனே நடித்திருக்கிறார்.
இதேபோன்று பல கதாபாத்திரங்கள் காலத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பழைய பாலைவச் சோலையில் சந்திரசேகர் மில் தொழிலாளி. இதில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கும் நிதின் சத்யா ஆட்டோ டிரைவர். கைலாஷ் நடித்த வேடத்தில் ரமணா நடித்துள்ளார்.
பாபி படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பாலைவனச் சோலையில் இடம்பெற்ற ஆளானாலும் ஆளு, மேகமே மேகமே பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன. அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் வைரமுத்து. படத்தில் நியூ இயர் கொண்டாட்ட பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
நவம்பர் ஆறு திரைக்கு வரும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.