முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > மு‌ன்னோ‌ட்ட‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு!
லோட்டஸ் பைவ் ஸ்டார் மற்றும் திருபிக்சர்ஸ் தயாரிப்பில் 'மெட்டி ஒலி' திருமுருகன் இயக்கும் படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு. எம் மகனில் பணியாற்றிய திருமுருகன், பாஸ்கர் சக்தி, பரத், வடிவேலு, வித்யாசாகர் மீண்டும் இதில் இணைந்திருக்கிறார்கள்.

கிராமத்துப் பள்ளிக்கூடம் ரேஞ்சில் இருக்கும் கலைக் கல்லூரியில் படிக்கிறார் பரத். அவரது அப்பா பொன்வண்ணன். காதல் காரணமாக முதல் மகனை இழந்த பொன்வண்ணன், பரத்திற்கு காதல் வராமல் பார்த்துக் கொள்கிறார். அவரது எண்ணத்துக்கு இடையூறாக வருகிறார் பூர்ணா.

படம் குறித்துச் சொல்தும் போது, "ஆக்ஷன், லவ், சென்டிமெண்ட் எல்லாம் கலந்ததாக இந்தப் படம் இருக்கும்" என்றார் திருமுருகன்.

படம் குறித்த சில தகவல்கள்....

பரத்தின் அப்பாவாக பொன்வண்ணனும், அம்மாவாக தாராவும் நடிக்கின்றனர்.

நாயகியாக நடிப்பவர் புதுமுகம் பூர்ணா.

வில்லன்களாக சங்கர் குரு இயக்குனர் ராஜாவும், எஸ்.ஐ. பாபுவும் நடித்துள்ளனர்.

பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார், வைத்தி கேமரா.

கல்லூரி அட்டெண்டராக வருகிறார் வடிவேலு. இவரது பார்ட் டைம் வேலை பேய் ஓட்டுவது. படத்தில் இவருக்கு ஒரு பாடலும் இருக்கிறது.

மியூசியம் அரங்கு ஒன்றை கலை இயக்குனர் பூபதி அமைத்துள்ளார். இதில் காதல் காட்சியும், சண்டைக் காட்சியும் எடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியில் மிகப்பெரிய முனீஸ்வரர் கோயில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
மேலும்
தோட்டா!
சண்ட - முன்னோட்டம்!
அ‌‌ஞ்சாதே!
தூ‌ண்டி‌ல் - ‌திரை மு‌ன்னோ‌ட்‌ட‌ம்!
'யாரடி நீ மோகினி'
‌பி‌ப். 25ல் 'பேரா‌ண்மை' பட‌ப்‌பிடி‌ப்பு!