முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » நட்சத்திர பேட்டி » நான் இனியும் குழந்தை நட்சத்திரம் அல்ல - ஹன்சிகா மோத்வானி (Hansika Motwani Interview)
முந்தையது|அடுத்தது
WD
சமீபத்தில் தமிழுக்கு கிடைத்த கொழு கொழு நடிகை ஹன்சிகா மோத்வானி. அவர் நடிக்க வேண்டியதில்லை, வந்து நின்றாலே திரை நிறைந்துவிடும் என்று என்றென்றும் காதல், வேலாயுதம் படங்களின் மூலம் சொல்ல வைத்தவர். ஹன்சிகாவின் ஒரு கல் ஒரு கண்ணாடி விரைவில் வெளியாகவிருக்கிறது. இதுதவிர தெலுங்கு, இந்தி என்று பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவ‌ரின் மினி பேட்டி.

குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே விருதுகள் வாங்க ஆரம்பித்தீர்கள் அல்லவா... அது எப்படி?

என்னுடைய அம்மா டாக்டர். ஸ்கூல் முடிந்த பிறகு அம்மாவின் மருத்துவமனையில்தான் இருப்பேன். அப்போது அங்கு வருகிறவர்களை மிமிக்‌ி செய்வேன். அப்படிதான் நான் நடிக்க ஆரம்பித்தேன் என்று சொல்லலாம். ஒன்பது வயதில் டிவி சீ‌ரியல் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஹிருத்தி‌ரோஷனுடனும் நடித்திருக்கிறீர்கள் அல்லவா?

ஹிருத்திக், ப்‌‌ரீத்தி ‌ஜிந்தா நடித்த கொய் மில் கயா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அது போல சுமார் 7 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். 14 விருதுகளையும் வாங்கியிருக்கேன்.

தமிழ், தெலுங்கில் நடித்தாலும் இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

அப்படியெல்லாம் இல்லை. நான் தமிழ், தெலுங்கில்தான் இப்போது அதிக படங்கள் செய்கிறேன். இந்தியில் இப்போது ஒரேயொரு படத்தில்தான் நடித்து வருகிறேன். மற்றபடி தமிழ், தெலுங்குக்குதான் முன்னு‌ரிமை.

ஹீரோயின் என்றால் மரத்தை சுற்றி டூயட் பாடுவதுடன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற அளவில்தான் இப்போதும் இன்டஸ்ட்‌ி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த‌சூழலில் உங்கள் படங்கள் திருப்திகரமாக இருக்கின்றனவா?

கண்டிப்பாக. நான் கதை கேட்டு, கேரக்டர் பிடித்துதான் ஒவ்வொரு படத்திலும் நடிக்கிறேன். மாப்பிள்ளை படத்தில் எனக்கு வித்தியாசமான வேடம்தான். அதேபோல் எங்கேயும் காதல். முழுக் கதையும் என் மீதே ட்ராவல் செய்யும். வேலாயுதத்தில் பப்ளியான கேரக்டர். அதில் என்னை ரசிக்காதவர்களே இல்லை. இந்தப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஹன்சிகாவை நீங்கள் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் பார்க்கலாம்.
முந்தையது|அடுத்தது
மேலும் படிக்க
Feedback Print