சிம்புவால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் - ‌தீ‌க்சா சேத்

திங்கள், 9 ஜனவரி 2012 (14:42 IST)

FILE
ராஜபாட்டையில் அறிமுகமான ‌தீ‌க்சா சேத்துக்கு நல்லவேளையாக அப்படம் வெளிவரும் முன்பே வேட்டை மன்னனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிம்பு ஜோடியாக நடித்துவரும் இவரைப் பற்றியும், இன்னொரு ஹீரோயினான ஹன்சிகா மோத்வானி குறித்தும் கோடம்பாக்கம் கிசுகிசு தி‌ரியை பற்ற வைத்திருக்கிறது. இருபதே வயது என்றாலும் வெளிப்படையாகப் பேசுவதில் அறுபதின் அனுபவம் தெ‌ரிகிறது ‌தீ‌க்சாவின் பேச்சில்.

வேட்டை மன்னனில் யார் ஹீரோயின். நீங்களா, ஹன்சிகா மோத்வானியா?

சிம்பு ரொம்ப வெளிப்படையாகப் பேசக்கூடியவர். என்னை அவர் ஒப்பந்தம் செய்யும் போதே, நீதான் ஹீரோயின் என்று சொன்னார். வேட்டை மன்னனில் நான்தான் ஹீரோயின். ஹன்சிகா மோத்வானியும் அதில் நடிக்கிறார். இதில் எந்த‌க் குழப்பமும் இல்லை.

ஹீரோ சிம்பு என்றதும் உங்களை குழப்பியிருப்பார்களே?

சிம்பு ரொம்ப சின்சியரான நடிகர். அவரது படங்களை நடிக்க வருவதற்கு முன்பே பார்த்திருக்கிறேன். அலட்டலாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, தொட்டி ஜெயாவில் அமைதியாக வந்து அசத்தியிருப்பார். அவரது வானம், ஒஸ்தி எல்லாம் பார்த்திருக்கிறேன். அவரால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும்.

தமிழ் சினிமா பிடிச்சிருக்கா?

நமது பிரதமரே தமிழ் சினிமா பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். இன்றைக்கு இந்தி சினிமா தமிழ் சினிமாவைப் பார்த்துதான் வளர்கிறது. தமிழ்ப் படங்கள்தான் இந்தியில் அதிகம் ‌ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் பிரபலமானால் இந்தி வாய்ப்பு எளிதாக கிடைக்கும். தமிழிலிருந்து இந்திக்கு செல்வது ரொம்ப ஈஸி.

FILE
ராஜபாட்டை உங்களுக்கு திருப்தியாக அமைந்ததா?

முதல் படம் மாஸ் படமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதுபோல் நல்ல கமர்ஷியல் படமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தது மறக்க முடியாதது. விக்ரம் நடிப்பு பற்றியும் இன்டஸ்ட்‌ி பற்றியும் நிறைய டிப்ஸ்கள் தந்தார்.

வேட்டை மன்னன்...?

ராஜபாட்டையிலிருந்து அப்படியே வித்தியாசமான கேரக்டர். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான சப்ஜெக்ட். கண்டிப்பாக இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.

ச‌ரி, உங்களுக்குப் பிக்காதது..?

எனக்கு இப்போதுதான் இருபது வயதாகிறது. என்னிடம் எப்போது கல்யாணம் என்று கேட்கிறவர்களை சுத்தமாகப் பிடிக்காது. அதற்கான நேரம் வரும்போது கல்யாணம் செய்துக் கொள்வேன்.

காதல்...?

ஷாருக்கான் மாதி‌ி யாராவது கிடைத்தால் காதல் பற்றி யோசிக்கலாம்.

உங்க புத்தாண்டு சபதம் என்ன?

நல்ல படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்கணும், நெ ஒன் பொசிஷனை எட்டிப் பிடிக்கணும், அவ்வளவுதான்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

சினிமா

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் ...

கவர்ச்சி மழையில் லட்சுமிராய்

"நெஞ்சைத் தொடு" படத்தில் லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்

கவர்ச்சிக்கு நோ சொல்லும் காம்னா

ப்ரியாமணியும் இவரும் சேர்ந்து "டாஸ்" என்னும் தெலுங்கு படத்தில் இப்போது நடித்துக் ...

ஜேம்ஸ்பாண்ட் நடிகரின் அபாரத் துணிச்சல்!

போல்டன் காம்ப்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் வாயிலாக புதிய ஜேம்ஸ்பாண்டாக ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

அவங்க ஸ்டைலுக்கு நான் அடிமை

இதே விஷயத்தை நாகரிகமான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் ஹாலிவுட் நடிகர் ஜாமி ஃபாக்ஸ். ஜாங்கோ ...

அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஆங்க் லீ

ஆங்க் லீ என்ற பெயரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை 2000ல் வெளியான Crouching Tiger, Hidden ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine