முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > நட்சத்திர பேட்டி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இளையராஜா எனது படத்தில் பாடுவது சந்தோஷம் - ஐம்புலன் இயக்குனர் சந்திராகுரு!  Search similar articles
webdunia photoWD
சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் படை வீடு. பன்னிரெண்டாம் வகுப்பு தேறியதும் நேராக பச்சையப்பா கல்லூரி. அங்கிருந்து பஸ் ஏறி கோடம்பாக்கம்! ஐம்புலன் படத்தின் இயக்குனர் சந்திரா குருவீன் கேரியர் ரூட் இது. கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும் சிரமங்கள் நிறைய என்றவரிடம் ஐம்புலன் குறித்தும், அவரது சினிமா பின்புலம் குறித்தும் கேட்டோம்.

உங்களின் முதல் திரை முயற்சி எது?

முதல் முயற்சி ஒரு குறும்படம். பெயர் மனு. இளையராஜா சாரோட குடும்ப டாக்டர் அமுதகுமார்தான் தயாரிப்பு. அப்புறம் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி தயாரித்த ஒரு படத்துக்கு நான்தான் கதை. சினிமாவில் இயக்குனராக முதல் முயற்சின்னா அது ஐம்புலன்தான்.

ஐம்புலன் படத்தோட நாயகன் தமிழ், ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷின் மகன். ஆக, வாரிசுக்காக உருவாக்கப்பட்ட கதையா ஐம்புலன்?

நிச்சயமாக இல்லை. தமிழை முதன் முதலா பார்த்தபோது குண்டா இருந்தான். என்னோட கதைக்கு ஸ்கூல் பையன் ரேஞ்சுக்குதான் வேணும். அதனால தமிழை திருப்பி அனுப்பிட்டேன். இது நடந்து இருபது நாள் இருக்கும். ஆளே மாறிப்போய் ஒல்லியா வந்து நின்னான். இருபது நாளும் எக்சர்சைஸ் செய்து உடம்பை குறைச்சிருக்கான். அந்த டெடிகேஷனுக்காக அவனை ஹீரோ வாக்கினேன்.

ஹீரோயின் யாரு?

பெயர் தர்ஷா. குருவியில விஜயோட தங்கையா நடிச்சிருக்காங்க.
1 | 2  >>  
மேலும்
படத்தில் எனக்கே முக்கியத்துவம் - நதியா!
ந‌ம்பவே முடிய‌வி‌‌ல்லை ‌: ப்‌ரியாம‌ணி!
சிறந்த வில்லன்னு பேர் வாங்கணும் - கொடைக்கானல் பட வில்லன் காண்டீபன்!
"‌சி‌னிமா கு‌றி‌த்த மாயை ‌விலக வே‌ண்டு‌ம்"
ஆக்சனிலும் கலக்குவேன் - நெஞ்சைத் தொடு இயக்குனர் ராஜ்கண்ணன்!
முழுக்க முழுக்க எதார்த்தமான படம் - இயக்குனர் மஜீத்!