முதன்மை பக்கம்  பொழுதுபோக்கு  சினிமா  நட்சத்திர பேட்டி
 
இசைக்கொரு பயிற்சிப் பள்ளி!- பரத்வாஜ்
Webdunia

Bharatwaj
Webdunia
திரை இசையில் தனி முத்திரை பதித்திருக்கும் இசையமைப்பாளர் பரத்வாஜ், இப்போது ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். "பரத்வாஜ் ஸ்கூல் ஆப் மியூசிக்" என்றொரு இசைப் பயிற்சிப் பள்ளியை தொடங்கியிருக்கிறார். இந்தப் புதிய துவக்கம் பற்றி பரத்வாஜிடம் பேசிய போது..

இசையமைப்பில் தீவிரமாக இருக்கும் உங்களுக்கு இசைப் பள்ளி தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?

சினிமாவிலும் சரி தொலைக் காட்சித் துறையிலும் சரி வேறு கலை நிகழ்ச்சிகளானாலும் சரி இசையில் பங்கு முக்கியமானது. இசைத்துறை, வியாபாரமாக பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. பெருகி வரும் எப்.எம்., வானொலிகளே இதற்கு சாட்சி. இப்படி நாளுக்கு நாள் இசைக்கான தேவை வளர்ந்து வருகிறது. ஆனால் நவீன தொழில் நுட்பத்துடன் இசையைச் சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை.

ஏன் இசைக் கல்லூரி கூட இருக்கிறதே..?

இசையைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதை தனித்தனி வித்துவான்களும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்களெல்லாம் பாரம்பரியமான இசையைச் சொல்லித் தருகிறார்கள். அதை மட்டும் வைத்துக் கொண்டு வணிக ரீதியில் வெற்றி பெற முடியுமா? இருபது வருஷமாக இசைப் பயிற்சி அனுபவம் உள்ள எத்தனையோ பேர் பெரிய அளவில் மேலே வர முடியவில்லை. சில நுட்பங்களை மட்டும் தெரிந்து கொண்டவர்கள் மேலே வரமுடிகிறது. அப்படி இன்றைய இசைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை எங்கள் பள்ளி கற்றுக் கொடுக்கிறது. தவறும் கலையால் பெரிய வெற்றி சாத்தியப்படுவதில்லை. தொழில்நுட்பத்துடன் இணையும் போது தான் வெற்றி அதிகரிக்கிறது.

இசைக்குத் தொழில்நுட்பம் எந்த அளவுக்குத் தேவைப்படுகிறது?

நான் இருபது வருஷமாக இசைத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். ஏறக்குறைய இந்தியாவில் உள்ள எல்லா பெரிய பாடகர்களையும் பாட வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இசைத் துறைக்கு கருவிகள் வாசிப்பவர்களிடம் எப்படி இங்கே வந்தீர்கள் என்றால் அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு வருவேன். வேடிக்கை பார்ப்பேன். அப்படியே ஆர்வம் வந்தது என்பார்கள். சில பேர் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன் என்பார்கள். ஆனாலும் பல பேரில் ஆதங்கம். எங்களுக்கு ஆர்வம் இருக்கிறது. ஈடுபாடு இருக்கிறது. சந்தேகங்களை தீர்க்க நெளிவு சுளிவுகளை சொல்லித் தர யாருமில்லை என்பதுதான். எனக்கும் கூட இதே அனுபவம் தான். முட்டி மோதி கற்றுக் கொண்டது தான் அதிகம். முன்பே சொன்ன மாதிரி பாரம்பரிய இசை தெரிந்தும் பல வருஷப் பயிற்சி அனுபவம் இருந்தும் மேலே வர முடியாமல் கஷ்டப்படும் பலரைப் பார்க்க முடிந்தது. அவர்களுக்கெல்லாம் இசையை நவீனப்படுத்திக் கையாளும் தொழில்நுட்பம் மட்டும் தெரிந்திருந்தால் எங்கோ போயிருப்பார்கள் என்று நினைப்பேன். இந்த விஷயங்கள் சொல்லித் தரப்பட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதை நாமே செய்தால் என் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்தப் பள்ளி. இன்றைக்கு இசைக்குப் பல்வேறு நிலைகளிலும் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. தொழில்நுட்பம் சேராத இசை வணிக ரீதியில் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்று ஆகிவிட்டது. அந்த தேவையை பூர்த்தி செய்யவே இந்தப் பயிற்சி.
1| 2
மேலும்
காம்னா காணாமல் போனது ஏன்?
நானும் காதலிக்கிறேன் - நிலா
காலம் ஒருநாள் மாறும்!-ஸ்ரீகாந்த் தேவா
சாயல் இல்லாத இசை!-"பாலி" பகவத்
நேரடிப் படங்களும் இயககுவேன்! - பிரபுதேவா
என் அரசியல்-சரத்குமார்