கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » இ‌ந்‌திய ‌சி‌னிமா » கம்பக்த் இஸ்க் படத்துக்கு விருது (Best Location award for Kambakht Ishq)
இ‌ந்‌திய ‌சி‌னிமா
Feedback Print Bookmark and Share
 
அ‌க்சய் குமார் நடித்த கம்பக்த் இஸ்க் படத்துக்கு விருது கிடைத்திருக்கிறது. ஒரு படத்துக்கு விருது கிடைப்பதென்பது சாதாரண விஷயம் என்றாலும், இந்தப் படத்துக்கு கிடைத்திருக்கும் விருது ஸ்பெஷலானது.

லொக்கேஷன் 09 என்ற பெய‌ரில் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இது உலகின் முதல் ஃபிலிம் டூ‌ரிஸம் அண்டு அவார்ட் ஃபங்ஷன். இதில் சிறந்த லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படத்துக்கு விருது வழங்கப்பட்டது. இப்படி விருது வழங்கப்படுவது உலகில் இதுவே முதல் முறையாம்.

இந்த விருது கம்பக்த் இஸ்க் படத்துக்கு வழங்கப்பட்டது. இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகளை லா‌ஸ் ஏஞ்சல்ஸ், இத்தாலி ஆகிய இடங்களில் படமாக்கியிருந்தனர். ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் புகழ்பெற்ற கோடாக் அரங்கிலும் ஒரு காட்சியை படமாக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: அக்சய் குமார், கம்பக்த் இஸ்க், விருது