கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » இ‌ந்‌திய ‌சி‌னிமா » பாலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ் (Bollywood Box Office)
இ‌ந்‌திய ‌சி‌னிமா
Feedback Print Bookmark and Share
 
இந்திப் படங்களின் சென்ற வார நிலவரப்படி ப்ளூ முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஆனாலும், படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Blue
நூறு கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் சென்ற வாரத்தில் இந்தியா முழுவதும் 3,68,22,470 ரூபாய் வசூலித்துள்ளது. சில மினிமம் பட்ஜெட் படங்கள் இதைவிட அதிக வசூலை பெற்றிருப்பது ப்ளூ படத்திற்கு கிடைத்த அடி என்றுதான் சொல்ல வேண்டும்.

All The Best
வெளியான முதல் வாரத்தில் பத்து கோடியை அனாயாசமாக தாண்டியிருக்கிறது இந்தப் படம். ரசிகர்கள் இந்தப் படத்துக்கு தரும் ஆதரவு நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. இந்தியாவில் இதன் முதல் வார வசூல், 13,59,12,264 ரூபாய்.

Main Aurr Mrs. Khanna
ரொம்ப சுமாரான வசூல். முதல் வாரத்தில் கோடியை கூட தொடவில்லை என்பது பெருத்த ஏமாற்றம். ஏறக்குறைய 86 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.

Wake Up Sid
குறைவான பட்ஜெட்டில் தயாரான இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்புகிறது. முதல் வாரத்தில் பத்து கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் இதுவரை 21,7,065,876 ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பாலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ்