பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் தேவையில்லை. இதுதான் பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் புதிய முழக்கம். ஒரு இயக்குனர் ஹிட் தேவையில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
கரண் ஜோஹர் தனது தர்மா புரொடக்சன் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளிவந்த வேக் அப் சிட் படம் வெற்றி பெற்றிருக்கிறது. இதையொட்டி பத்திரிக்கையில் ஜோஹர் சொன்ன சேதிதான் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் தேவையில்லை.
தான் தயாரிக்கும் படங்கள் அறுபது கோடி, நூறு கோடி வசூல் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட இயக்குனர்களிடம் கேட்பதில்லை. படம் நன்றாக இருக்க வேண்டும், நஷ்டமடையக் கூடாது என்று மட்டுமே கேட்டுக் கொள்வேன்.
ஒரு தயாரிப்பாளராக நான் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டை எதிர்பார்க்கவில்லை. நல்ல படம், மக்கள் விரும்பிப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள் என அள்ளிவிட்டுள்ளார்.
அடுத்த வருடம் இவர் இயக்கத்தில் ஷாருக் நடித்த மை நேம் இஸ் கான் வெளியாகிறது. அப்போதும் இதே டயலாக்கை ரிப்பீட் செய்வாரா ஜோஹர்?