புரூஸ் வில்லிஸ், ஹாலிவுட்டின் ஆக்சன் கிங். ஆக்சனில் தனியாவர்த்தனம் நடத்தி வந்த புரூஸ் முதல் முறையாக சில்வஸ்டர் ஸ்டாலோனுடன் இணைந்து நடித்திருக்கிறார். விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.
இந்த புதிய படத்திலும் மொட்டைத் தலையுடன்தான் நடித்திருக்கிறாராம். ஹாலிவுட்டில் அழகு குறித்து டோண்ட் கேராக இருக்கும் ஒரே நடிகர் என்று இவரைச் சொல்லலாம்.
புரூஸின் முன்னாள் மனைவி டெமி மூர் பல மில்லியன் டாலர்கள் தனது அழகை அதிகப்படுத்த சமீபத்தில் செலவழித்துள்ளார். இதையொட்டி புரூஸிடமும் காஸ்மெடிக் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், எனக்கு இந்த தோற்றமே போதும்.
அழகு சாதனங்களுக்காக சில நடிகர்கள் பெண்களைவிட அதிகம் செலவழிக்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை என்கிறார் இந்த சூப்பர் ஹீரோ.
புரூஸுக்கு தற்போது வயது 54. சதை தொங்கத் தொடங்கிவிட்டது. வயதாகிவிட்டதே என்று கேட்டால், “யாராவது சொன்னால்தான் எனக்கு வயதாகிவிட்டது என்று தோன்றுகிறது. மற்றபடி 24 வயது இளைஞனாகவே என்னை நினைத்துக் கொள்கிறேன்.”
உண்மைதான், தனது வயதில் பாதி உள்ள மாடலுடன்தான் தற்போது பொழுதை கழித்து வருகிறார் புரூஸ்.