கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » ஹாலிவுட் » பிராட் பிட்டின் பயம்!
ஹாலிவுட்
Feedback Print Bookmark and Share
 
பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி தம்பதியரின் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை அரை டஜனை தாண்டிவிட்டது. ஆனால் இதுவரை இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

வீட்டில் ஷ்ரெக் கார்ட்டுன் கேரக்டரை சுட்டிக் காட்டி, ஷ்ரெக் திருமணம் செய்துவிட்டதே, நீங்கள் மட்டும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என குழந்தைகள் கேட்கிறார்களாம்.

ஆனால், திருமணம் செய்து கொள்ள பிராட் பிட்டுக்கு பயம்.

ஜெனிபர் அனிஸ்டனுடனான - எஸ், ஜான் மேயரை திருமணம் செய்து கொண்ட அதே அனிஸ்டன் - திருமணம் விவாகரத்தில் முடிந்த போது ரொம்பவே கவலைப்பட்டாராம் பிட். அதன் பாதிப்பிலிருந்து அவரால் இப்போதும் முழுமையாக விடுபட முடியவில்லையாம்.

ஜோலியுடனான திருமணமும் அப்படியயாரு பிரிவில் முடிந்தால் அவரால் தாங்கவே முடியாதாம். அதனால்தான் திருமணம் செய்து கொள்ள பயப்படுகிறாராம்.

இங்கு பிரியாமல் இருக்க திருமணம் செய்கிறார்கள். அங்கு பிரிந்து விடுவோமோ என்று திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். நல்ல விந்தை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பிராட் பிட் திருமணம் ஹாலிவுட்