கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » ஹாலிவுட் » லியோனார்டோவின் கல்யாண ஆசை
ஹாலிவுட்
Feedback Print Bookmark and Share
 
லியோனார்டோ டி காப்ரியோ திருமணம் மீதான தனது ஆசையை வெளியிட்டுள்ளார். திருமணம் செய்து தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்க ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மிகச் சாதாரணமான ஆசை. ஆனால் அவரை நன்கு தெரிந்தவர்களுக்கு இது நம்ப முடியாத ஆச்சரியமான தகவல். சென்ற வருடம்வரை திருமணம் எல்லாம் நமக்கு சரிவராது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்தான இவர்.

ஏன் இந்த திடீர் என்ற மாற்றம் என்று கேட்டால், ஏன் மாறக் கூடாதா, ஒரு மனிதனுக்கு அனுபவம் வந்து தனது கருத்தை மாற்றிக் கொண்டால் அது தவறா என்று புத்திசாலித்தனமாக திருப்பிக் கேட்கிறார்.

திருமணம் செய்ய தயார், ஆனால் என்னுடைய கேர்ள் ப்ரெண்ட் யாரையும் மனைவியாக்கிக் கொள்வதாக உத்தேசமில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இந்த கருத்து மட்டும் மாறாமலிருக்குமா என்ன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: லியோனார்டோவின் கல்யாண ஆசை