முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > ஹாலிவுட்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அல்பசினோ : பாண்ட் படத்தின் புதிய வில்லன்!
காட் ஃபாதர் ஹீரோ அல்பசினோவுக்கு வயதானாலும், வலுவான கேரக்டர்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

புதிய ஜேம்ஸ்பாண்ட் படமான குவாண்டம் ஃப் சொலாஸ் படத்தில் வில்லனாக நடிக்க அல்பசினோவை கேட்டிருக்கிறார்கள்.

இந்த வில்லன் ஒரு தீவிரவாதி. பாண்டின் காதலியை கொலை செய்கிறான். படத்தில் சிறிது நேரமே வரும் கதாபாத்திரம் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த வில்லன் வாய்ப்பை இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை அல்பசினோ. அதற்குள், அல்பசினோ இதுவரை வந்த பாண்ட் பட வில்லன்களில் மிகவும் பவரஃபுல் வில்லனாக அல்பசினோ இருப்பார் என அமெரிக்கப் பத்திரிக்கைகள் ஆருடம் சொல்லத் தொடங்கிவிட்டன.

அல்பசினோ ஒத்துக்கொண்டால் ஏப்ரல், மேயில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை லண்டன் பைன்வுட் ஸ்டுடியோவில் எடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

அல்பசினோ தலையசைக்க வேண்டும்!
மேலும்
காதலனுக்கு நவோமி வாட்ஸ் கண்ணீர் அஞ்சலி!
பிரிட்டிஷ் அகாடமி விருதுகள்!
ஈராக்கில் ஏஞ்சலினா ஜோலி!
புரூஸ் வில்லிஸின் புதிய காதலி!
2008 ஆஸ்கார் பரிந்துரை பட்டியல்!
குவா‌ண்ட‌ம் ஆஃ‌ப் சொலே‌ஸ்!