அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள்

புதன், 1 மே 2013 (11:57 IST)

Widgets Magazine

FILE

அல்டிமேட் பாடல்
-----------------

எதை எடுப்பது... எதை விடுவது...? தீனா படத்திலேயே பல பாடல்கள். வத்திக்குச்சி பத்திக்காதுடா... சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... மங்காத்தாவின் ஆடாமல் ஜெயித்தோமடா... சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பாடல்களின் சாயலில், சிச்சுவேஷனில் அஜீத்தே வேறு படங்களில் நடித்திருக்கிறார். அமர்க்களத்தில் வரும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்... ரொம்பவே ஸ்பெஷல். அதேபோன்ற சிச்சுவேஷன்; உணர்ச்சி வேகம் வேறு பாடல்களில் இருந்தது இல்லை.

என்றாலும் நாம் தேர்வு செய்வது ஆசையில் வரும் கொஞ்சநாள் பொறு தலைவா. காதலை அதன் உணர்வோடும் சதையோடும் சொல்லும் பாடல். அஜீத்தின் ஹேண்ட்ஸமான மூவ்மெண்ட்ஸ். வாலியின் அட்டகாசமான வரிகள். சரணத்தில் வாலி விளையாடியிருப்பார்.

நேத்துக்கூட தூக்கத்துல
பார்த்தேன் அந்த பூங்குயில

தூத்துக்குடி முத்தெடுத்து
கோர்த்து வச்ச மாலைப்போல
வேர்த்துக் கொட்டி
கண்முழிச்சுப் பார்த்தா... அவ
ஓடிப்போனா உச்சி மலைக்காத்தா...

சொப்பனத்தில் இப்படிதான்
எப்பவுமே வந்து நிப்பா
சொல்லப்போனா பேரழகி
சொக்கத்தங்கம் போலிருப்பா...

வத்திக்குச்சி இல்லாமலே
காதல் தீயை பத்த வச்சா...

தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசிய கொடிபோல பொத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள...

கனவில் வருகிற காதலி கனவு கலைந்ததும் காணாமல் போவதை இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது. தேசிய கொடி போல காதலியை நெஞ்சுக்குள் பொத்தி வைத்த உவமை அருமை. அடுத்த சரணம் அதைவிட அட்டகாசம்.

என்னோடுதான் கண்ணாமூச்சி
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி

கட்டாயம் என் காதல் ஆட்சி
கை கொடுப்பாள் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்து வந்து போறா.. அவ
சந்தனத்தில் செஞ்சு வச்ச தேரா...

என்னுடைய காதலியை
ரொம்ப ரொம்ப பத்திரமாய்
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன்
வண்ண வண்ண சித்திரமாய்
வேறொருத்தி வந்து தங்க
எம்மனசென்ன சத்திரமா..?

வாலியின் வரிகளும், ராஜு சுந்தரத்தின் கோரியோகிராஃபும், அஜீத்தின் நடனமும், நடுவில் வரும் காதலியின் அறிமுகமும் இதனை மறக்க முடியாத பாடலாக்குகிறது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாடும் நடப்பும்

1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பின் 50ஆம் ஆண்டு நினைவுகள்

1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக ...

பன்றிக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி?

பன்றிக் காய்ச்சல் பாதிக்காமல் தப்புவதற்கு, பொது இடங்களுக்கு அதிகம் செல்லாமல் வீட்டிலேயே ...

பு‌திய செ‌ய்‌திக‌ள்

ஃபெப்ரவரி இரண்டாவது வாரத்தில் புலி பர்ஸ்ட் லுக்

புலி படத்தில் விஜய்யின் கெட்டப் எப்படி இருக்கும்? ரசிகர்கள் திரையுலகினர் எல்லோருக்கும் ஆர்வம்தான்.

சிரஞ்சீவியை சீண்டிய வர்மா

வாரத்துக்கு ஒரு வம்பு, மாதத்துக்கு ஒரு படம் என்று திரையுலகில் திகில் கிளப்பிக் கொண்டிருக்கிறார்

Widgets Magazine

மு‌க்‌கிய செ‌ய்‌திக‌ள்

வெள்ளை மாளிகையில் புகுந்து ஒபாமாவின் தலையை துண்டிப்போம் - ஐஎஸ்ஐஎஸ்

வெள்ளை மாளிகையில் புகுந்து ஒபாமாவின் தலையை துண்டிப்போம் என்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் மிரட்டல் ...

மாயமான மலேசிய விமானம் MH370: விபத்தில் சிக்கியதாக அறிவிப்பு

மாயமான மலேசிய விமானம் MH370 விபத்துக்குள்ளாகிவிட்டது என்று மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குடியரசு தின விழாவில் அரசுத்துறை வாகனங்களில் ஜெயலலிதா படங்கள்: கருணாநிதி கேள்வி

தண்டனை பெற்ற ஒருவரின் படங்களை அரசு நிகழ்ச்சியில் காட்சியாக்கி வெளியிட்டிருப்பது சட்டப்படி ...

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - திருமாவளவன்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ...

Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine