செவ்வாய், 19 ஜூன் 2012( 19:37 IST )
ஒருவழியாக போடா போடி அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட உள்ளனர்.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஹாங்காங்கில் சமீபத்தில் நடந்த படப்பிடிப்புடன் முடிவுக்கு வந்துள்ளது. போஸ்ட் புரொடக்சன் வேலைகளை முடித்து படத்தை ஆகஸ்டில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பாக இசை வெளியீடு, அதற்கும் முன் சிங்கிள் ட்ராக்.
தரண் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். விக்னேஷ் இயக்கம். வரலட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார்.
படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூஸிக் வாங்கியுள்ளது.