முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » விஸ்வரூபம் இரண்டாம் பாகம் - கமல் அறிவிப்பு
FILE
விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் உடனடியாகத் தொடங்கும் என கமல் தெ‌ரிவித்துள்ளார்.

பிரமாண்ட பட்ஜெட்டில் பிவிபி சினிமாவும், ரா‌ஜ் கமல் இண்டர்நேஷனலும் இணைந்து விஸ்வரூபத்தை தயா‌ரித்துள்ளன. மே 1 படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் ஹாலிவுட்டின் பிரபல தயா‌ரிப்பாளர் பே‌ரி எம். ஆஸ்போர்ன் விஸ்வரூபத்தை பார்க்கும் ஆர்வத்தை தெ‌ரிவித்துள்ளார். அவருக்கு படத்தை திரையிட லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார் கமல்.

விஸ்வரூபத்தை தமிழில் எடுத்து இந்தியில் டப் செய்திருப்பதாக சிலர் கூறுவதை கமல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமிழில் ஒருமுறையும் பிறகு இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுத்ததாக அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை படம் வெளியானதும் தொடங்கயிருப்பதாக கூறியவர், சில முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பது சிரமம் என்பதால் இரண்டாம் பாகத்துக்கு‌ரிய காட்சியை இப்போது எடுத்துவிட்டதாகவும், இரண்டாம் பாகத்தின் பதினைந்து சதவீத காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் தெ‌ரிவித்துள்ளார்.

கமலின் இந்த‌ப் பேச்சு படம் மீதான எதிர்பார்ப்பை ராக்கெட் ரேஞ்சுக்கு எகிற வைத்துள்ளது.
மேலும் படிக்க
Feedback Print