முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » விஸ்வரூபம் - கமல் என்னும் பெர்ஃபக் ஷனிஸ்ட்
விஸ்வரூபம் படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியிட்டிருக்கிறார் கமல்ஹாசன். புறஒன்று பறந்து செல்ல அமெ‌ரிக்க நகரப் பின்னணியில் கமலின் தோற்றம் வரும் சில வினாடி டீஸர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

விஸ்வரூபம் என்ற எழுத்துகளை உருது எழுத்து வடிவத்தில் டிஸைன் செய்துள்ளனர். தீவிரவாதத்தைப் பற்றிய படம் என்பதை இந்த உருது வடிவ எழுத்துகள் உறுதி செய்கின்றன.

ஒரு விஷயத்தை நுணுக்கமாக அணுகுவதில் கமல் நிபுணர். அவரது நுணுக்கம் பலநேரம் அடுத்தவருக்கு தெ‌ரியாத அளவுக்கு நுட்பமாக அமைவதுண்டு. இந்த டீஸ‌ரிலும் அதுபோன்ற ஒரு விஷயம் இடம்பெற்றுள்ளது. நாம் வலப்பக்கத்திலிருந்து இப்பக்கமாக எழுதுவோம். உருது அப்படியே உல்டா. இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக எழுத வேண்டும். இந்த டீஸ‌ரிலும் படத்தின் பெயர் உருது போல இடப்புறமிருந்து வலப்பக்கமாக எழுதப்படும்.

கண்ணிமைக்கும் நேரத்தில் வரும் இந்த பெயர் விஷயத்திலும் தனது பெயரை அழுத்தமாக பதித்திருக்கிறார் கலைஞானி.

அதுதான் கமல்.
மேலும் படிக்க
Feedback Print