ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பின்நவீனத்துவ இசைக்கலைஞரோ?(வீடியோ)
வியாழன், 2 பிப்ரவரி 2012( 18:51 IST )
ரிதம் படத்தில் வரும் நதியே நதியே என்ற பாடல் "டீப் பர்ப்பிள்" என்ற பெயருடைய இசைக்குழுவின் "ஸ்ட்ரேஞ்ஜ் கைண்ட் ஆஃப் உமன்" என்ற பாடலின் சாயலில்(!) உள்ளது.
இப்போது நாம் வாழும் உலகம் பின்நவீன உலகம் என்று அறிவுலகத்தினால் அழைக்கப்படுகிறது. பின்நவீனத்துவ தத்துவ துணிபுகளில் ஒன்று ஒரிஜினல் என்று எதுவுமே கிடையாது எல்லாமே நகல்தான். அல்லது ஒரிஜினல் என்பது பல பிரதிகள் எடுக்கப்படுவதில்தான் அதன் ஒரிஜினாலிட்டியே உள்ளது என்று கூறுகிறது.
இந்தக் கருத்தாக்கத்தை எத்தனை பேர் ஏற்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இதனை ஒப்புக் கொள்வார் என்றே தோன்றுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பும் எங்களது ஒரிஜினல் கண்டுபிடிப்பல்ல இணையதள எமகாதகர்கள் கண்டுபிடித்ததன் ஒரு மறுபதிவே!