முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » யார் அ‌‌ஜீத்தின் ஜோடி? (Who is Ajit's Heroine?)
அ‌‌ஜீத் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது உறுதியானதும் எழுந்த கேள்வி, யார் ஜோடி?

மங்காத்தா கண்டபடி ஓடியதால் அ‌‌ஜீத்துடன் ஜோடி சேர முன்னணி நடிகைகளும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், இன்றைய தேதியின் சென்சேஷன், அமலா பால்தான் அ‌‌ஜீத் ஜோடி என்றொரு தகவலையும் கசியவிட்டுள்ளனர்.

முன்னணி நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்றால் இப்படிதான் பல நடிகைகளின் பெயர்கள் அடிபடும். அப்படிதான் அமலா பாலின் பெயரை‌ச் சொல்கிறார்கள். ஆக்சுவல் ஜோடி அனுஷ்காதான் என்று எதிர்கோஷ்டி இன்னொரு ராகம் வாசிக்கிறது.

ஜோடி யார் என்பதை விஷ்ணுவர்தன் அறிவிக்காதவரை இந்த பரமபத விளையாட்டு நிற்காது.
மேலும் படிக்க
WebduniaWebdunia