கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » விஜய், முருகதாஸ் இணைகிறார்கள்?
இப்படி கேள்விக்குறி போட்டு ஏற்கனவே இரண்டு செய்திகள் எழுதிவிட்டோம். என்றாலும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் மௌனம் சாதிப்பதால் கேள்விக்குறியையே தொடர வேண்டியுள்ளது.

விஜய்யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்ற செய்தியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் சில பெயர்கள் இந்தக் கூட்டணியில் சேர்ந்திருக்கின்றன.

7ஆம் அறிவு படத்தை இயக்கிவரும் முருகதாஸ் அது முடிந்ததும் விஜய்யை இயக்குகிறார் என பலமாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே சீமானின் பகலவன் படத்தை விஜய் கிடப்பில் போட்டுள்ளார் என்றும் தெ‌ரிவிக்கிறார்கள்.

எப்படியோ... விஜய், முருகதாஸ் இணையும் படம் குறித்து நாளுக்கொரு செய்தி என சூழல் சூடாகி வருகிறது. இந்தப் படத்துக்கு நீரவ்‌‌ஷா ஒளிப்பதிவு செய்கிறார், இசை ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் அனேகமாக தீபிகாபடுகோன் நாயகியாக இருக்கலாம் என்கிறார்கள் உறுதியுடன். தயா‌ரிப்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனாம். படத்துக்கு மாலை நேரத்து மழைத்துளி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இந்தத் தகவல்களை இரு தரப்புமே மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
இதையும் தேடு: விஜய், முருகதாஸ்