சசி இயக்கத்தில் பரத்

புதன், 25 நவம்பர் 2009( 16:58 IST )
பூ படத்தை இயக்கிய சசி தனது வழக்கமான மென்மையிலிருந்து விலகி புதிய படத்தை இயக்கவிருக்கிறார். மோசர் பேர் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
சொல்லாமலே தொடங்கி பூ வரை சசி இயக்கிய அனைத்துப் படங்களும் காதலின் மென்மையான பக்கங்களை பேசுபவை. சசி என்றாலே மென்மை என்று சொல்லும் அளவுக்கு அவருடைய படங்கள் அவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தன.
தனது புதிய படத்தின் வழியாக இந்த அடையாளத்தை மீற இருக்கிறார் சசி. ஆம், தனது புதிய படத்தை ரொமாண்டிக் த்ரில்லராக எடுக்கவிருக்கிறார் சசி. பூ படத்தை தயாரித்த மோசர் பேர் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
சசியின் புதிய படத்தில் பரத் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரத்துக்கு ஹிட் கொடுத்தது மோசர் பேர் தயாரித்த கண்டேன் காதலை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மோசர் பேர் தயாரிக்கும் சசியின் படத்தில் நடிக்க பரத் கால்ஷீட் தருவார் என அடித்துக் கூறுகிறார்கள்.
நம்பும்படிதான் இருக்கிறது பரத்தின் சூழலும்.