கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » பிரச்சனையில் ரேனிகுண்டா (Renikunda in Trouble)
சினிமா செய்தி
Bookmark and Share Feedback Print
 
கிராமத்திலிருந்து தப்பித்து வரும் இளம் குற்றவாளிகள் மும்பைக்கு செல்லும் வழியில் ஆந்திரா எல்லையான ரேனிகுண்டாவில் மாட்டிக் கொள்கிறார்கள். அங்கு நடக்கும் பிரச்சனைகள்தான் ரேனிகுண்டா படத்தின் கதை.

தொழில்முறை கொலையாளிகளைப் பற்றிய இப்படத்துக்கு சென்சா‌ரில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் படத்தை மும்பை ‌ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

ரிவைஸிங் கமிட்டியிலும் கணிசமான காட்சிகள் வெட்டப்படும் சாத்தியமிருப்பதால் என்ன செய்வது என்று கையை பிசைந்தபடி காத்திருக்கிறார்கள் பணத்தை முதலீடு செய்தவர்கள்.

இந்தப் படத்தில் தயா‌ரிப்பாளர் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி சனுஜா. படத்தின் தலைவிதி தற்போது ‌ரிவைஸிங் கமிட்டியின் கைகளில். விரைவில் படக்குழு ‌‌ரீஷூட்டிங் சென்றால் ஆச்ச‌ரியப்படாதீர்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ரேனிகுண்டா, சென்சார், ரிவைஸிங் கமிட்டி