சர்வதேச படவிழாவில் யோகி

புதன், 25 நவம்பர் 2009( 16:42 IST )
சர்வதேச படவிழாவில் தமிழ்ப் படங்கள் வெற்றிவாகை சூடுவது அதிகரித்து வருகிறது. இயக்குனர்களின் ஈடுபாடும், சமரசமில்லாத உழைப்புமே இதற்கு காரணம்.
துபாயில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் அமீரின் யோகி கலந்து கொள்கிறது. அமீர் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் சேரிப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் தயாராகியிருக்கிறது. யோகேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருக்கிறார். சுப்பிரமணிய சிவா படத்தை இயக்கியிருக்கிறார்.
வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதுபற்றி குறிப்பிடுகையில், படத்தில் வரும் சண்டைக் காட்சிகளை முன்னிட்டே யு சான்றிதழ் தராமல் யு/ஏ சான்றிதழ் தந்ததாக அமீர் குறிப்பிட்டார்.
துபாய் சர்வதேச திரைப்பட விழா யோகியின் இந்த சென்சார் களங்கத்தையும் போக்கும் என்று நம்புவோம்.