ஆண்ட்ரியாவுக்கு கல்தா?

புதன், 25 நவம்பர் 2009( 14:11 IST )
இது மாலை நேரத்து மயக்கம் படத்தில் தனுஷ் ஜோடியாக ஆண்ட்ரியா நடிப்பதாக சொல்லப்பட்டது. படம் பிடித்து போஸ்டர் கூட ஒட்டினார்கள். ஆனால், படம் தொடர்ந்து நடைபோடுமா என்பது சந்தேகத்துக்கிடமாக கிடப்பில் கிடக்கிறது.
இந்நிலையில் விக்ரம் நடிக்கும் படத்தில் ஸ்வாதியுடன் ஆண்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொன்னார்கள். ஸ்வாதி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்த செல்வராகவன் ஆண்ட்ரிடியா சம்பந்தப்பட்ட காட்சிகளை கிடப்பில் போட, சந்தேகம் வலுத்திருக்கிறது.
லேட்டஸ்ட் தகவல்களின்படி, ஆண்ட்ரியாவுக்கு பதில் புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க தீர்மானித்திருக்கிறாராம் செல்வராகவன். நட்சத்திர ஹோட்டல் பாரில் நடந்த சண்டைக்கும் இந்த திடீர் முடிவுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
விரைவில் ஆண்ட்ரியா விலக்கப்பட்ட செய்தி ரசிகர்களை வந்து சேர உள்ளது. இதையும் மீறி ஆண்ட்ரியா படத்தில் இடம்பிடித்தால்... ம்ஹும், அந்த உடும்புப் பிடி பற்றி நாம் என்ன சொல்ல?