குரு சிஷ்யன் படத்தை தயாரித்து இயக்கும் ஷக்தி சிதம்பரத்தின் தயாரிப்பில் விஷால் நடிக்கிறார். ஷக்தி சிதம்பரம் இயக்கத்துடன் படங்களை தயாரித்தும் வருகிறார்.
அவரது தயாரிப்பில் விஷால் நடிக்கிறார் என்பது புதிய செய்தி. இந்தப் படத்துக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தற்போது தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துவரும் விஷால் அடுத்து பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஷாலுடன் ஆர்யாவும் நடிக்கிறார்.
இதையடுத்து ஷக்தி சிதம்பரம் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். இந்தப் படத்தை சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்குவார் என்று தெரிகிறது. விஷால் ஜோடியாக நடிக்க ஷம்முவிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.