கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ராஜமௌலி இயக்கத்தில் விக்ரம்? (Vikram in Rajamouli Direction?)
சினிமா செய்தி
Bookmark and Share Feedback Print
 
மஹாதீரா படத்தின் இயக்குனர் ராஜமௌலி நடிகர் விக்ரமை சந்தித்து‌ப் பேசியிருக்கிறார். விரைவில் அவரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கலாம் என்ற யூகம் இந்த சந்திப்பால் வலுப்பட்டுள்ளது.

விக்ரம் தற்போது செல்வராகவனின் படம் மற்றும் விக்ரம் கே.குமார் இயக்கும் 24 ஆகிய இரு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

செல்வராகவனின் படத்தின் படப்பிடிப்புக்காக லடாக் சென்ற நேரம் அவரை அங்கு வந்து சந்தித்திருக்கிறார் ராஜமௌலி. விக்ரம் நடிப்பில் படம் இயக்குவதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் மஹாதீரா இயக்குனர் என்கிறார்கள்.

தெலுங்குப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது விக்ரமின் நீண்ட நாள் கனவு. அந்நியன் போன்ற சில படங்க‌ள் தமிழைவிட தெலுங்கில்தான் ஆர்ப்பாட்டமாக ஓடின.

ராஜமௌலி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் என்கிறார்கள். விரைவில் விக்ரமிடமிருந்து அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ராஜமௌலி, மஹாதீரா, விக்ரம்