ஆதவனை முந்திய பழசிராஜா

செவ்வாய், 24 நவம்பர் 2009( 19:02 IST )
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதல் முறையாக ஒரு மலையாள டப்பிங் படம் கௌரவமான இடத்தைப் பிடித்திருக்கிறது. அது பழசிராஜா என்று சொல்லத் தேவையில்லை.
4. பேராண்மை
ஜனநாதனின் படம் நான்காவது இடத்தில் உள்ளது. படத்துக்கு கிடைத்த பாராட்டுடன் ஒப்பிடுகையில் கலெக்சன் கம்மிதான். ஐந்துவார இறுதியில் 2.42 கோடிகளை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதி வசூல், 7 லட்சங்கள்.
3. ஆதவன்
விளம்பரங்களின் வெளிச்சத்தில் இதுவரை 4.55 கோடிகளை வசூலித்திருக்கிறது இந்த கமர்ஷியல் மசாலா. சென்ற வார இறுதி வசூல் 8 லட்சங்கள்.
2. பழசிராஜா
இந்த டப்பிங் படம் முதல் மூன்று தினங்களில் 14.4 லட்சங்களை வசூலித்து விநியோகஸ்தர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. தொடர்ந்து இந்த வசூலை தக்கவைத்துக் கொள்ளுமா என்பது ரசிகர்களின் கையில் இருக்கிறது.
1. கண்டேன் காதலை
இந்தி ரீமேக்கான கண்டேன் காதலை தொடர்ந்து முதலிடத்தில். சந்தானத்தின் காமெடியும், தமன்னாவின் கேரக்டரும் படத்தின் சத்தான பகுதிகள். மூன்று வார முடிவில் 1.55 கோடிகைளை வசூலித்திருக்கும் இப்படம், சென்ற வார இறுதியில் 17.5 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை யோகி, மத்திய சென்னை, நான் அவன் இல்லை இரண்டாம் பாகம் ஆகியவை வெளியாவதால் பாக்ஸ் ஆஃபிஸில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.