தொலைக்காட்சியில் கௌதமி

செவ்வாய், 24 நவம்பர் 2009( 19:00 IST )
கௌதமி மீண்டும் நடிக்கிறார். இந்தமுறை தொலைக்காட்சியில். அபிராமி ராமநாதன் இந்த தொலைக்காட்சியின் தயாரிப்பாளர்.
திருமணத்துக்குப் பிறகு கௌதமி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. விவாகரத்துக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு வரவேற்பு இல்லாததால் குறுகிய காலத்தில் அது நிறுத்தப்பட்டது.
இப்போது மீண்டும் நடிக்க தீர்மானித்துள்ளார். அபிராமி ராமநாதன் தயாரிக்கும் இந்த மெகா தொடரில் கௌதமிதான் நாயகி. கலைஞர் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது. தொடருக்கு அபிராமி என்று பெயர் வைத்துள்ளனர்.
நேற்று அபிராமி மெகா மாலில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கேமராவை முடுக்கி தொடரை தொடங்கி வைத்தார். குட்டி பத்மினி உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.