ஜனவரியில் தனது புதிய படத்தை தொடங்குகிறார் கே.வி.ஆனந்த். இதுவொரு குறுகியகால தயாரிப்பு.
படத்தின் கதையை வழக்கம்போல எழுத்தாளர்கள் சுபா எழுதியுள்ளனர். அதிரடியான ஆக்சன் கதை. ஹீரோவாக நடிப்பது சிம்புவா? ஆர்யாவா? இன்னும் முடிவு செய்யவில்லை என கே.வி.ஆனந்த் தரப்பு கூறுகிறது. ஆனால், சிம்பு கூறுவது வேறு மாதிரி இருக்கிறது.
கே.வி.ஆனந்தின் படத்தில் நடிக்கிறேன் என்று சிம்பு உறுதியாக கூறுகிறார். படத்தில் அவருக்கு இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இந்தப் படம் முடிந்த பிறகு ஜூன் மாதம் திட்டமிட்டபடி சூர்யா நடிக்கும் படத்தை ஆனந்த் தொடங்குகிறார். படத்தை ரெட்ஜெயண்ட் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்.