காமெடி காம்பினேஷன்

செவ்வாய், 24 நவம்பர் 2009( 18:50 IST )
கண்டேன் காதலை படத்துக்குப் பிறகு தனித்துவமான காமெடி நடிகராக உருவெடுத்திருக்கிறார் சந்தானம். சோலோவாக காமெடி செய்ய இவருக்கு வாய்ப்புகள் குவிகிறது.
தனியாவர்த்தனம் செய்வதுதான் சந்தானத்தின் விருப்பம். அதேநேரம் பெரிய காமெடி நடிகர்கள் உடன் நடித்தாலும் மறுப்பதில்லை.
மலை மலை படத்தில் சந்தானத்துடன் இணைந்து கஞ்சா கருப்பு காமெடி செய்திருந்தார். படமும் காமெடியும் ஹிட். தற்போது அதே டீம் மாஞ்சா வேலு படத்தை எடுத்து வருகிறது.
முந்தைய படத்தின் ப்ளஸ் பாயிண்டுகள் அனைத்தும் இந்தப் படத்திலும் இடம்பெற வேண்டும் என்பதற்காக சந்தானத்தையும், கஞ்சா கருப்பையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.
பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, கனல் கண்ணனின் சண்டைப் பயிற்சியில் வளர்ந்து வருகிறது மாஞ்சா வேலு.