மீண்டும் அபிராமி

செவ்வாய், 24 நவம்பர் 2009( 18:48 IST )
விருமாண்டி படத்தில் தனது அபிரிதமான நடிப்பை வெளிப்படுத்திய அபிராமிக்கு பிறகு எந்த வாய்ப்பும் அமையவில்லை. கொஞ்ச நாள் பெங்களூரு, அமெரிக்கா என்று சுற்றியவர் மீண்டும் கோடம்பாக்கம் திரும்புகிறார்.
சஞ்சய்ராம் பூஜை போடும் பாதி படங்கள் திரைக்கு வருவதில்லை. இருந்தும் அவரிடம் கதை கேட்க நடிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். சரத்குமாருக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார் சஞ்சய்ராம். கதை சரத்துக்கு பிடித்திருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படலாம்.
இந்தப் படத்தில் சரத்துக்கு ஜோடியாக நடிக்க அபிராமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தை சஞ்சய்ராமின் லிங்கம் தியேட்டர்ஸ் தயாரிக்கும் என்று தெரிகிறது.