கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ஆப்சென்ட் வி.ஐ.பி.கள் (Paiya Audio Released)
சினிமா செய்தி
Bookmark and Share Feedback Print
 
விழாவுக்கு வந்த விஐபிகள் பற்றிதான் வாய் நிறைய பேசுவார்கள். பையா பாடல் வெளியீட்டவிழா வேறு மாதி‌ி. வராதவர்களைப் பற்றிதான் அரங்கத்தில் காது நிறைய கசமுசா.

பையாவின் முதல் ஆடியோவை இயக்குனர் ஷங்கர் வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார். படத்தின் பாடலைப் பார்த்த அனைவரும் பரவச மூடில் இருந்தனர். படத்தைப் பற்றி பேசினார்களோ இல்லையோ... மழையில் நனைந்தபடி தமன்னா போட்ட ஆட்டத்தை மறக்காமல் குறிப்பிட்டார்கள். அதிலும் பார்த்திபனின் லொள்ளும், ஜெயம் ரவியின் ஸ்கூல் கோயிங் கேர்ள் ஜொள்ளும் ஜோர்.

மிஷ்கின் பேசும் போது கூட்டத்தில் கூச்சல். அதற்கு நடுவிலும் அறியாத விஷயத்தை பகிர்ந்து கொண்டார். புகழ் பெற்ற இயக்குனர் பெட்‌ரிகோ பெலினி, பள்ளியில் பெயிலான தினத்தை தனது வாழ்வின் சந்தோஷமான தினம் என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல் நானும், லிங்குசாமியும் பெயிலாகியிருக்கிறோம் என்றார். லிங்குசாமி தமன்னாவின் தமிழைப் பற்றி புகழ்ந்து பேசினார். அது உண்மை என்பதுபோல் தமிழிலேயே பேசி அசத்தினார் தமன்னா.

அழைப்பிதழில் பெயர் போட்டிருந்தும் உதயநிதி ஸ்டாலினும், தயாநிதி அழகி‌ரியும் ஆப்சென்ட். இவர் வருவார் என்று அவரும், அவர் வருவார் என்று இவரும் விழாவை புறக்கணித்ததாக கூட்டத்தில் பலரும் பேசுவதை கேட்க முடிந்தது.

விழாவில் அனைவரையும் கவர்ந்தவர் கஸ்தூரி. ‌ரிட்டையர்ட் காலத்திலும் கலர்ஃபுல் காஸ்ட்யூமில் வளைய வந்தவரைப் பார்த்தால் விரைவில் சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வருவார் என்று தோன்றியது. அண்ணி, அக்கா வேடங்களுக்கு ஆள் தேவைப்படுகிறவர்கள் குறித்து வைத்துக் கொள்ளவும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பையா பாடல் வெளியீட்டு விழா