பசங்க படத்துக்காக பெருமைக்குரிய தங்க யானை விருது இயக்குனர் பாண்டிராஜுக்கு கிடைத்திருக்கிறது. நடிகை ஜுஹி சாவ்லா இந்த விருதினை அவருக்கு அளித்தார்.
16வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் 20 நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்பட்டன. தமிழிலிருந்து கலந்து கொண்ட படம், பசங்க.
இந்தப் படத்துக்காக சிறந்த குழந்தைகள் பட இயக்குனருக்கான தங்க யானை விருது பாண்டிராஜுக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆசிய படங்கள் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
சிறந்த படத்துக்கான விருது ஈரான் திரைப்படமான ஹாஃப் மைன் ஹாஃப் கிடைத்தது.