கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மீண்டும் தொலைக்காட்சியில் சொர்ணமால்யா (Sowrnamalya again in TV)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
இளமை புதுமை நிகழ்ச்சியை புதுமையாக தொகுத்து வழங்கியவர் சொர்ணமால்யா. சில திரைப்படங்களில் நடித்தவர் மீண்டும் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறார். இந்தமுறை நெடுந்தொடர் நாயகி.

WD
ஸீ தொலைக்காட்சி நவம்பர் 23 முதல் யாதுமாகி நின்றாய் என்ற நெடுந்தொடரை ஒளிபரப்புகிறது. திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகும். இதில் சொர்ணமால்யாவுடன் நீரஜா, ஸ்ரீரேகா, காத்தாடி ராமமூர்த்தி, நரேந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். சரவணன் இந்தத் தொடரை இயக்குகிறார்.

மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் யாதுமாகி நின்றாய் தொடரை தயா‌ரித்துள்ளது. வழக்கமான அழுகாச்சி தொடராக இல்லாமல், குற்றமே செய்யாத சில நிரபராதிகள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தண்டிக்கப்படும் துர்பாக்கிய சூழலை கதைக்களமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது.

பெண்கள்தான் இந்தத் தொட‌‌ரின் முக்கிய கதாபாத்திரங்கள். ஒரு போலீஸ் அதிகா‌ி, ஒரு சமூக சேவகி, ஒரு வழக்குரைஞர்... இவர்கள் தங்களுடைய சவால்களை எதிர்கொள்ளும்போது கணவனும், குடும்பமும் அதற்கு உறுதுணையாக இருந்தார்களா என்ற குடும்ப சென்டிமெண்டும் இந்த‌தொட‌ரில் உண்டு.

மேலு‌ம், இ‌ந்த‌த் தொடரை ‌சி‌னிமா தர‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌ம். காரண‌ம், இ‌த்தொட‌ரி‌ன் ‌கி‌ரியே‌ட்டி‌‌வ் பொறு‌ப்பை நடிகை ரேவ‌தியு‌ம், ரோ‌கி‌ணியு‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சொர்ணமால்யா, தொலைக்காட்சி தொடர், யாதுமாகி நின்றாய்