அமீரின் ரிவென்ஜ்

செவ்வாய், 17 நவம்பர் 2009( 15:50 IST )
யோகி இந்த மாதம் ரிலீஸ். யோகேஸ்வரன் என்ற யோகியின் சேரி வாழ்க்கையில் எதிர்படும் சங்கடங்களும், சந்தோஷங்களுமே கதை.
சுப்பிரமணிய சிவா படத்தை இயக்கியிருந்தாலும், படத்தின் மூலவர் அமீர்தான். அதாவது ஸ்கிரிப்ட் அமீருடையது.
சமீபத்தில் நடந்த விழாவொன்றில், தனது சீடன் சசிகுமார் சுப்பிரமணியபுரத்தில் நடித்ததைப் பார்த்துதான் யோகியில் தான் நடிக்க முன் வந்ததாக தெரிவித்தார் அமீர். இதில் சிங்கிள் பிரேம் அளவுக்கும் உண்மையில்லை.
இதனை போட்டுடைத்தவரும் அவருடைய சீடர்தான். சுப்பிரமணியபுரம் தொடங்குவதற்கு முன்பே யோகியை ஆரம்பித்துவிட்டாராம் அமீர். அதைப் பார்த்துதான் நானே நடிக்க வந்தேன் என்று கூறியிருக்கிறார் சசிகுமார்.
அப்படியானால் அமீர் நடிகராக உண்மை காரணம் என்ன?
ஹீரோக்களுடன் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள்தான் காரணம். ஒரு நடிகனை இயக்குனரால் மட்டுமே உருவாக்க முடியும். நல்ல இயக்குனர் இருந்தால் யாரும் நடிகனாகலாம். இதனை சில ஹீரோக்களுக்கு உணர்த்துவதற்காகவே யோகியில் ஹீரோவானாரம் அமீர்.
படத்தில்தான் ஹீரோ பழி வாங்குவார். பழி வாங்குவதற்காகவே ஹீரோவாகியிருக்கிறார் அமீர். விடாதீங்க... ஜெயிச்சு காட்டுங்க.