இன்னும் பத்து வருடங்கள் கழித்துதான் கில் பில் படத்தின் மூன்றாவது பாகத்தை எடுப்பேன். பாவம், உமா தர்மன் தயாராக நேரம் வேண்டுமல்லவா?
இப்படி கமெண்ட் அடித்திருப்பவர் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் குவான்டின் டொரன்டினோ. கில் பில் படத்தில் அந்தளவுக்கு உமா தர்மனை பெண்ட் கழற்றியிருப்பார் குவான்டின். புதைகுழியில் சவப்பெட்டியிலிருந்து உமா தர்மன் தப்பித்து வெளிவரும் காட்சிகள் எல்லாம் மிரட்டலானவை.
இந்த உமா தர்மனை ரோல் மாடலாக வைத்து பழசிராஜா படத்தில் நடித்ததாக தெரிவித்தார் பத்மப்ரியா. மும்முட்டி, சரத்குமார் நடித்திருக்கும் இந்த சரித்திரப் படத்தில் பத்மப்ரியா நீலி என்கிற புரட்சிக்காரியாக நடித்திருக்கிறார். மரத்தை சுற்றி டூயட் பாடாது, நாட்டுக்காக வில் அம்பு ஏந்தி போராடும் புரட்சிகர வேடம்.
படத்தின் சண்டைக் காட்சிகளில் திறமையாக நடித்ததற்கு கில் பில்-லில் நடித்த உமா தர்மன்தான் ரோல் மாடல் என்று கூறினார் பத்மப்ரியா. இந்தப் படம் இம்மாதம் தமிழுக்கு வருகிறது.
நம்மூர் ரிவால்வர் ரீட்டாவைப் பார்த்திருந்தால் பத்மப்ரியாவுக்கு ரோல் மாடல் தேடி ஹாலிவுட் வரை போக வேண்டிய தேவை இருந்திருக்காது.