கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » வர்றார் ஜே.கே.‌ரித்தீஷ் (JK Rithish coming back)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
நாயகன் வெற்றிக்குப் பிறகு பஞ்ச் டயலாக்கும் பறந்து பறந்து சண்டையுமாக தமிழ் சினிமாவை கூறு போடுவார் என்று பயந்ததற்கு மாறாக சினிமா பக்கமே திரும்பவில்லை, ஜே.கே.‌ரித்தீஷ்.

இந்த எட்டாவது வள்ளலுக்கு எம்.ி. சீட் கொடுத்து பாராளுமன்றத்துக்கு திசை மாற்றிவிட்டதற்கு, தமிழக மக்கள் முதல்வருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டவிழா நடத்த வேண்டும்.

பெ‌ரிய ‌திரையை மறந்தாலும் சின்னத்திரை வழியாக தினம் உங்களை சந்திக்க முடிவெடுத்திருக்கிறார் ‌ரித்தீஷ். செய்தியை முழுமையாக படிக்கும்முன் யாரும் மயக்கம் போட்டு விடாதீர்கள். இந்த சந்திப்பு நடிகராக அல்ல, தயா‌ரிப்பாளராக.

கலைஞர் தொலைக்காட்சிக்காக ஆண்டாள் என்ற மெகா தொடரை தயா‌ரிக்கிறார் ‌ரித்தீஷ். தொடரை இயக்குகிறவர் விடுதலை. மெகா தொடர் என்றால் ஹீரோயின் மட்டும்தானே. இதில் ஹீரோயின் நம் சுகன்யா.

வழக்கம் போல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாரே என்று கலங்க வேண்டாம். இதில் முதல் முறையாக காக்கிச் சட்டை போட்டு கி‌ரிமினல்களை கலக்கியெடுக்கப் போகிறாராம்.

தினம்தோறும் பிரைம் டைமில் இந்த மெகா சீ‌ரியல் வரப்போகிறது என்பது இல்லத்தரசிகளுக்கு இன்னுமொரு இனிய செய்தி.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ஜேகே ரித்தீஷ், சின்னத்திரை, மெகா சீரியல், சுகன்யா