செல்வா - ஸெல்வன் இருவருமே இயக்குனர்கள். உச்சரிப்பு ஏறக்குறைய ஒன்றுபோல் இருப்பதால் சின்ன பிழை நடந்திருக்கிறது.
செல்வா நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதேஷ் ஜெபக் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர். ஜீவன் ஹீரோ.
ஸெல்வன் கவிதாலயா தயாரிக்கும் கிருஷ்ணலீலை படத்தை இயக்கி வருகிறார். இதிலும் ஜீவன் ஹீரோ.
கிருஷ்ணலீலையை அடுத்து கவிதாலயா தயாரிக்கும் படத்துக்கு முறியடி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கணேஷ் வெங்கட்ராம் ஹீரோ. படத்தை இயக்குகிறவர்...
இங்குதான் பிழை நடந்திருக்கிறது. செல்வா முறியடி படத்தை இயக்குகிறார். கவிதாலயாவின் கிருஷ்ணலீலை படத்தை ஸெல்வன் இயக்குவதால் முறியடி படத்தையும் அவர்தான் இயக்குகிறார் என்று தவறாக பலரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் (அதில் நாமும் உண்டு).
ஆனால, முறியடியை செல்வாதான் இயக்குகிறார், ஸெல்வன் அல்ல. இதில் இரண்டாவது ஹீரோவாக நடிக்க சத்யராஜை தேர்வு செய்துள்ளனர்.